வைகோ கோடிகளில் புரள்கிறார்...ரூ.250 கோடிக்கு சொத்து! சிகரெட் கம்பெனி- மல்லை சத்யா
துரை வைகோவுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும், செங்கப்பட்டில் ரூ.250 கோடி சொத்து இருப்பதாகவும் மதிமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட மல்லை சத்யா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, “துரை வைகோவுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. செங்கப்பட்டில் ரூ.250 கோடி சொத்து இருக்கிறது. செங்கல்பட்டில் ரூ.15 கோடி மதிப்பிலான இடத்தில் ரூ.5 கோடிக்கு அரண்மனை போல் வீடு உள்ளது. செய்தி கசியாமல் இருக்க கடந்தவாரம் யாரயும் அழைக்காமல் வீட்டில் கிரகப் பிரவேசம் செய்துள்ளனர். வீட்டை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துரை வைகோ சிகரெட் கம்பெனி நடத்துகிறார். மதுவுக்கு எதிராக நடைபயணம் செல்லும் வைகோவின் உறவினர் மது தொழிற்சாலை நடத்துக்கிறார். அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் முழுவதும் நேரடியாக வைகோவுக்கு வருகிறது. ரூ.5 கோடி மதிப்பில் மிகப்பெரிய நட்சத்திர விடுதியை வைகோ பல ஆண்டுகளுக்கு முன் வாங்கினார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன.
துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதனால் BJP உடன் இணைந்து செயல்பட நினைக்கிறார். ராமதாஸ் அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுவதுபோல், ஒருநாள் வைகோவும் வருத்தப்படுவார். சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ. 1998ல் மதிமுகவுக்கு நாடாளுமன்ற வாசலைத் திறந்து வைத்தது அதிமுக தான். அதிமுகவுடனான கூட்டணி தர்மத்தை மீறி வாஜ்பாய் அரசுக்கு தார்மீக ஆதரவு தந்ததால் அதிமுகவின் கோபத்தைப் பெற்றது” என்றார்.


