மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் சடலம்
Jul 24, 2025, 17:22 IST1753357963225
சிவகங்கை மாவட்டம் முக்குடி கிராமத்தில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் முக்குடி கிராமத்தில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் கிணறு ஒன்று தோண்டப்பட்டது. அந்த விவசாய கிணற்றில் உருக்குலைந்த நிலையில், ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற திருப்புவனம் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


