தமிழகத்தில் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி உள்ளது : கமல் ஹாசன் ட்வீட்!

 

தமிழகத்தில் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி உள்ளது : கமல் ஹாசன் ட்வீட்!

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதி கோரி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியம் ராஜேந்திர பட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்ததாகவும், அதை அவர் நிராகரித்து விட்டார் என்றும் கூறி அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தில் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி உள்ளது : கமல் ஹாசன் ட்வீட்!

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணையை வெளியிட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி உள்ளது : கமல் ஹாசன் ட்வீட்!

இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிராம சபை கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவருக்கு மட்டுமே கூட்ட அனுமதி உள்ளது. மாவட்ட ஆட்சியர் விருப்பத்தின்படியே கிராம சபை கூட்டம் நடக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், “கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.