எந்த நாட்களில் எந்த நேரத்தில் தங்கம் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க!

 
1

வாரத்தில் மூன்று நாட்கள் தங்கம் வாங்க உகந்த நாளாகும். செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தங்கம் வாங்கலாம்.

 

குளிகை நேரத்தில், என்ன செய்தாலும் அது மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால், குளிகை நேரத்தில் வாங்கலாம்.

 

நவகிரகங்களில் குரு பகவான் தங்கத்தைக் குறிப்பர். எனவே, குரு பகவான் உச்சம் அடையும் பூச நட்சத்திரம் வரும் நாளில், தங்கம் வாங்கினால் நிறைய தங்கம் சேரும்.

செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு அன்று, செவ்வாய் ஹோரை, குரு ஹோரை ஆகிய ஹோரை நேரங்களில் தங்கம் வாங்கலாம்.

ராகு காலத்தில், கடைசி 20 நிமிடங்கள் அமிர்த யோகமாகும். எனவே, ராகு காலத்தில் இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் தங்கம் சேரலாம்.

அடமான நகையை மீட்க பரிகாரம்

அடமான நகையை மீட்பதற்கு உண்டான பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு இனிமேல் நீங்கள் தங்க நகையை அடமானம் வைப்பதாக இருந்தால், சனி ஹோரையில் தங்க நகையை அடமானம் வைக்கக்கூடாது. சனிஹோரையில் ஒருமுறை தங்கத்தை நீங்கள் அடமானம் வைத்து விட்டால், அந்த தங்க நகை மீண்டும் உங்கள் வீடு திரும்பாது. எழுதி வச்சுக்கோங்க. எவ்வளவோ பணம் உங்கள் கைக்கு வந்தாலும், அந்த நகையை மீட்க முடியாத சூழ்நிலை வந்துவிடும். இந்த சனி ஹோரையை மட்டும் கவனமாக பாருங்கள். ஹோரை தெரியாது என்றாலும், ஹோரை தெரிந்தவர்களிடமோ அல்லது புரோகிதர்களிடமோ கேட்டு இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். காலண்டரில் ஹோரை அட்டவணை இருக்கும்.

இருந்தாலும் ஒவ்வொரு நாள் சூரிய உதயத்தை வைத்து இந்த ஹோரை கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அது பஞ்சாங்கத்தை பார்த்து, ஜோதிடம் சொல்லும் ஜோதிடர்களுக்கு சரியாக தெரியும். குரு ஹோரை, சுக்கிர ஹோரையில் தங்க நகைகளை அடமானம் வைக்கலாம். நகை அடமானத்தில் இருக்கிறது மொத்தமாக பணத்தைக் கட்டி உங்களால் மீட்க முடியவில்லை எனும் பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நகைக்கான தொகையை நாம் திருப்பி செலுத்தக்கூடிய வாய்ப்புகள் வங்கிகளில் இருக்கும். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் பணத்தை திருப்பிக் கொடுக்கலாம்.

செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் வரும் அந்த நேரத்தை கணக்கில் கொண்டு பணத்தை கட்டும்போது, உங்களுடைய அடமான நகையை சீக்கிரம் மீட்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். செவ்வாய்க்கிழமை மதியம் 1:15 மணிக்கு மேல் மதியம் 2:00 மணிக்குள் அடமானத்தில் இருக்கும் தங்க நகைக்கு ஒரு சிறு தொகையை கட்டி வாருங்கள்.சீக்கிரத்தில் அந்த நகையை மீட்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்துவிடும். பண வரவும் அதிகரிக்கும். கடன் சுமையும் குறையும். எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த ஹோரை ரகசியத்தை புரிந்து கொள்பவர்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்