காந்தியடிகளின் வரலாறு அழியாச் சுவடுகளாக என்றென்றும் நிலைத்திருக்கும் - தினகரன் ட்வீட்

 
ttv

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

gandhi
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பாரத தேசத்தின் விடுதலைக்காக வன்முறையற்ற அகிம்சை போராட்டத்தை அறிமுகப்படுத்திய நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று.

tn

நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களின் மனதில் சுதந்திர உணர்வை தூண்டி விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், அவர் நடத்திய அகிம்சை போராட்டங்களும் அழியாச் சுவடுகளாக என்றென்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.