"நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக்கூடாது" - செல்வப்பெருந்தகை எம்எல்ஏ

 
selva perunthagai

மகாத்மா காந்தி காட்டிய பாதையில் நடப்பதன் மூலம்தான் சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட முடியும் என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ  தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தனது சமூகவலைத்தள பக்கத்தில், நமது நாட்டில் அவர்களின் வெறுப்பு மற்றும் வன்முறையின் சித்தாந்தம் நமது மரியாதைக்குரிய மகாத்மா காந்தி அவர்களின் உயிரை பறித்தது. 

இன்றும் அதே சிந்தனையுடன் இருக்கும் அவர்கள், மகாத்மாவின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் நம்மிடமிருந்து பறிக்க விரும்புகிறது.

gandhi

ஆனால் அவர்களின் இந்த வெறுப்புப் புயலில், உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக்கூடாது.

இதுவே மகாத்மாக காந்தி அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 


அத்துடன் மற்றொரு பதிவில், மகாத்மா காந்தி ஒரு சித்தாந்தம்; 

அந்த சித்தாந்தமானது, வெறுப்பு மற்றும் வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமையை நமக்கு அளிக்கிறது

அவர் காட்டிய பாதையில் நடப்பதன் மூலம்தான் சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட முடியும்.

இதுவே காந்திஜிக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.என்று பதிவிட்டுள்ளார்.