மகாத்மாவின் தியாகத்தையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் - ஈபிஎஸ்

 
ep

மகாத்மா காந்தியின்   தியாகத்தையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

gandhi

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆங்கிலேய ஆட்சியை அகற்ற , நம் தாய் திருநாட்டை மீட்டெடுக்க மக்களை ஒன்று திரட்டி அறவழிப் போராட்டங்களை துணை கொண்டு,  சமூக தீண்டாமைகளை கண்டித்து, கொள்கை மாறா பற்றுடன்  "வாய்மையே வெல்லும்" என்பதற்கு எடுத்துகாட்டாய் வாழ்ந்த தூய அறநெறியாளர்.


நம் நாட்டினுடைய விடுதலை போராட்டதை ஒருங்கிணைத்து வழிநடத்திய, நம் தேசத்தந்தை #மகாத்மாகாந்தி அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.