“விஜய் தொகுதி வாரியாக சென்று மக்களை சந்திப்பார்”- வெற்றி சான்றிதழை பெற்று தவெக வேட்பாளர் பேட்டி

 
ச்

மதுரை தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் கோபிசன் வெற்றி பெற்று எம்எல்ஏ  சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோபிசன், “மதுரை தெற்கு தொகுதி மக்கள் ஆர்வமாக தவெகவிற்கு வாக்களித்துள்ளனர். வாக்களித்த 23ஆம் தேதியே எங்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எனக்கு வாய்ப்பு கொடுத்த தளபதி அண்ணனுக்கும், நிர்வாகி ஆனந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . தொகுதியில் அடிப்படை பிரச்சனையான சாக்கடை மற்றும் தெருவிளக்குகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிக்க வார்டு வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிக்க திட்டமிடப்படும். கிருது மால்  நதியை சீரமைக்கப்படும். வைகை கரை ஓரம் பார்க் அமைக்கப்படும். மேலும் பொது மக்களுக்கு வசதியாக தெப்பக்குளம் சுற்றி பேட்டரி கார்கள் இயக்கப்படும். உணர்வுபூர்வமாக தவெகவிற்க்கு வாக்களித்துள்ளனர். தளபதி முதல் மாநாட்டில் இருந்தே சொல்லிக்கொண்டே இருந்தார். மக்கள் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். தளபதி தொகுதி வாரியாக சென்று மக்களை சந்திப்பார். எல்லா சமூக மக்களும் எங்கள் குடும்பத்தினரே... அந்த அடிப்படையில் வேலைகள் பார்ப்போம்” என்றார்.