அதிர்ச்சி சம்பவம்! பாதாள சாக்கடையில் சிக்கிய சிறுமியின் கால்!

மதுரையில் அரசு பள்ளிக்கு சென்ற சிறுமியின் கால் திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை இருந்துள்ளது. இந்த நிலையில், சிறுமியின் கால் பாதாள சாக்கடையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதாள சாக்கடை பாதுகாப்பின்றி திறந்த நிலையில் கிடந்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடையில் சிக்கிய சிறுமியை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். காலில் பலத்த காயம் அடைந்த சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கு சென்ற போது சிறுமியின் கால் பாதாள சாக்கடையில் சிக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பாதாள சாக்கடையை மூடாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணி முடிந்தவுடன் பாதாள சாக்கடைகளை உடனே மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.