மதுரை சரவணா ஸ்டோர்ஸ் வழக்கு; அனுமதியின்றி இயங்குகிறதா ஃபுட் கோர்ட்?- நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு

 
madurai high court

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை  கோரிய வழக்கினை தீர்ப்பிற்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Plea in Madras HC seeks temporary shutdown of Madurai's Super Saravana  Stores | The News Minute


மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டது. கட்டுமான பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.


பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் கட்டுமான பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. இதனால் ஏராளமான வாகனங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகின்றன இதனால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருகில்  மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


கட்டிடப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே எவ்விதமான அவசரகால வெளியேறும் வழிகள் இன்றி கட்டிடம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வளவு பெரிய வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட தற்காலிக தடை விதிக்க வேண்டும் அல்லது சில தளங்களையாவது மூட உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

Madras High Court slams favouritism, orders exam

இதற்கு முன்பு நடைபெற்ற விசாரணையின் போது, சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடத்தில் மார்ச் 1 தேதி தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக மனுதாரர் தரப்பில் நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "சரவணா ஸ்டோர் கட்டிடத்தில் உரிய அனுமதி பெறாமல் ஃபுட் கோர்ட் இயங்கி வருகிறது. மேலும் கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்வதற்காக சென்னை ஐஐடியைச் சேர்ந்த கட்டிட நிபுணர் , காவல்துறை தலைவர் மற்றும் இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து சரவணா ஸ்டோர் கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்" என வாதிட்டனர்

இதேபோல் சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில், "கட்டிடம் முழுவதுமாக கட்டப்பட்டு முறையான அனுமதி பெற்றே திறக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் மனுவில் ஃபுட் கோர்ட் பற்றி எந்த விதமான கேள்வியும் எழுப்பப்படவில்லை. அவர் அதிகாரப்பூர்வமாக மனுவில் கேட்கும் பட்சத்தில் நானும் அதற்கான அனுமதி சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயார்" என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதி, வழக்கினை தீர்ப்பிற்காக தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைத்து உத்தரவிட்டார்.