காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

 
shoot out

மதுரை ஈச்சனேரியில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை ஈச்சனேரி பகுதியில் காவலர் மலையரசன் என்பவர் கடந்த 19ம் தேதி மர்ம நபர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில், காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுனரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். பணத்திற்காக காவலரை எரித்துக் கொன்றதாக மூவேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார். சுட்டுப் பிடிக்கப்பட்ட மூவேந்தருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.