பதில் இல்லாதவர்கள் கேள்விகளை ஒழிப்பார்கள் - சு.வெங்கடேசன் விமர்சனம்

 
su venkatesan

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்ற அறிவிப்பை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.  

வருகிற செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலைய்ல், இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், தனி நபா் தீா்மானங்கள் மீதான அலுவல்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்ற அறிவிப்பை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பதில் இல்லாதவர்கள் கேள்விகளை ஒழிப்பார்கள். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடருக்கான அழைப்பு வந்துள்ளது.  உறுப்பினர்களின் கேள்வி நேரம் நீக்கப்பட்டுள்ளது.  அதானி, மணிப்பூர், சிஏஜி அறிக்கை என எதிர்கட்சிகளின் எந்தக் கேள்விக்கும் பதிலில்லாத ஒரு அரசு வேறென்ன செய்யும்? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.