மதுரை மிசா பாண்டியன் திமுகவிலிருந்து அதிரடி நீக்கம்

 
மிசா பாண்டியன்

மிசா பாண்டியன் திமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Misa Pandian from Madurai district suspended from DMK..! | மதுரை  மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்..!

மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் மிசா பாண்டியன், இவர் மீது மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 54வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கும் நூர் ஜஹான் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தின்போது, மதுரை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவரும், மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் மிசா பாண்டியன் மிரட்டியதாகவும், தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் திமுக கட்டுப்பாட்டை மீறியும்,கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.