மதுரை மீனாட்சி கோயிலில் 4 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து..!

 
1

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, வரும் 17-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் அனைவரும் இலவசமாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும், கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்களின் கைகளில் பெற்றோர் மற்றும் முகவரி விவரங்கள் அடங்கிய அடையாள சீட்டு இணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.