#JUSTIN சொத்து வரி வசூலித்ததில் பல கோடி முறைகேடு புகார்- மதுரை மேயர் ராஜினாமா!
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா செய்தார்.
மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பொன்வசந்தம் செயல்பட்டு வந்தார். மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்பதில் பல கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் தினோஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை துவங்கினர். இதில் மண்டல தலைவர்களின் ஆப்பரேட்டர்கள், முன்னாள் பொறியாளர் உள்ளிட்ட பலர் இதில் சம்பந்தப்பட்டது தெரியவந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி மதுரை மாநகராட்சியின் 5 மண்டல தலைவர்கள் பதவியம்யை ராஜினாமா செய்தனர். மாநகராட்சியின் சொத்துவரிக்குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் ஊழல் தொடர்பாக கைது செய்யபட்டார். இதனைத் தொடர்ந்து மேயர் கணவர் பொன்வசந்த் ஆகஸ்ட் மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மேயரின் கணவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் வழங்கியுள்ளார். அதில் " தனது குடும்ப சூழல் காரணமாக தான் பதவியை ராஜினாமா செய்வதாக", குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து துணை மேயர் தலைமையில் மேயர் கடிதத்தை ஏற்பது தொடர்பாக அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.


