மதுரை குடமுழுக்கில் முறைகேடு- அமைச்சர் ரமேஷ் மீது விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவின்போது VIP பாஸ் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார், மிகப்பெரிய அதிர்வலைகளை மதுரை முழுவதும் உண்டாக்கியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா காணவரும் பக்தர்களுக்காக 2000 பாஸ்கள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. உபயதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்காக பாஸ் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 3000 பாஸ்களை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், 3500 பாஸ்களை அமைச்சர் நிர்மல் குமாரும் வாங்கிச் சென்றதாக புகார் எழுந்தது. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் உபயதாரர்களுக்கு 2000 பாஸ்கள் மட்டுமே வழங்கபட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. அமைச்சர்கள் வாங்கிச் சென்ற பாஸ்களை ஆயிரக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் விஐபி பாஸ் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அறநிலையத்துறையை திறம்பட நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் ரமேஷ் மீது எழுந்துள்ள இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் ரமேஷ் பொறுப்பேற்ற பிறகு அவர் மீது முதல் விசாரணை நடந்திருப்பது இந்து சமய அறநிலைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

