மதுரையில் 99 போலீசாருக்கு ஓய்வு…காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா

 

மதுரையில் 99 போலீசாருக்கு ஓய்வு…காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 61 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் 99 போலீசாருக்கு ஓய்வு…காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா

இந்நிலையில் மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களில் 57 வயதிற்கு மேற்பட்ட மூன்று காவல் ஆய்வாளர்கள், 71 சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் 22 காவல் உதவி ஆய்வாளர்கள் மூன்று தலைமை காவலர்கள் என மொத்தமாக 99 போலீசாருக்கு ஓய்வு அளிக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். இவர்கள் ரயில்வே மருத்துவமனையில் உடல்பரிசோதனை செய்த பின் ஓய்வெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரையில் 99 போலீசாருக்கு ஓய்வு…காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா

முன்னதாக சென்னை காவல்துறையில் மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன், ஆயுதப்படை காவலர் நாகராஜன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.