மதுரை சிசிடிவி காட்சி.. நெஞ்சம் பதைபதைக்கிறது..! – ஸ்டாலின் அரசை விளாசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்..!
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில்,
மதுரை ஜீவா நகரில் ஐந்து பள்ளி மாணவர்கள் இணைந்து பெட்ரோல் குண்டு வீசியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் தெருக்களில் உலவும் CCTV காணொளிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அவல ஆட்சியில் படிக்கும் மாணவர்கள் ரவுடிகளாக உருமாறிக் கொண்டிருப்பது நமது சமூகத்திற்குப் பேராபத்தானது. இந்த லட்சணத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் விளம்பர விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர் திமுகவினர் என அவர் கூறியுள்ளார்.
அரசுப் பள்ளிகளும், படிக்கும் மாணவர்களும் இப்படிக் கெட்டுச் சீரழிந்து கொண்டிருப்பதைக் காணும் நமக்கு தான் நெஞ்சம் பதறுகிறதே தவிர, சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களோ சாவகாசமாகக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களை இப்படிப் பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது என்றும் நயினார் தெரிவித்துள்ளார்.
Shocking CCTV footage of youths fleeing with weapons after hurling petrol bombs to threaten the public in Jeeva Nagar area of Madurai In this case, on the 2nd again, Jeeva Nagar Vivekananda 1st Street.@shreyasharma_SS pic.twitter.com/W26eTpES4C
— News18 (@CNNnews18) February 6, 2026