மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது - வீரர்கள் உற்சாகம்!

 
t n

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாடு பிடி வீரர்கள் உற்சாகமாக மாடுகளை அடக்கி வருகின்றனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை அவனியாபுரம், பால்மேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் புகழ்பெற்றவை. பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இந்த போட்டியில் 435 மாடுபிடி வீரர்களும், 817 காளைகளும் பங்கேற்றன.

இந்த நிலையில், இன்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சுமார் ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன. இதேபோல் காளைகளை பிடிப்பதற்காக 700 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது சுற்றில் நீல நிற உடையுடன் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். முதல் சுற்று முடிவில் தமிழரசன் என்பவர் முதல் இடத்திலும், ராஜா என்பவர் இரண்டாம் இடத்திலும், அஜித் என்பவர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.