"உயிரை கொடுத்தாவது நடத்துவோம்; தருமபுர ஆதீன பல்லக்கை நானே சுமப்பேன்' - மதுரை ஆதீனம்

 
tn

தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம்  என மதுரை ஆதீனம் கூறியுள்ளார் 

தமிழகத்தில் மிகப் பழமையான ஆதீனமாக கருதப்படும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனம் மடத்தின் பீடாதிபதி மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய  சுவாமிகளின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு வெள்ளிப் பல்லக்கில் வீதி உலா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

tn

ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்லும் நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி ஆட்சியர் தடை விதித்துள்ள நிலையில் மடத்தின் பாரம்பரியத்தையும்,  மரபுகளையும் காக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. 

tn

இந்நிலையில் தருமபுர ஆதீனம்  பல்லக்கை நானே சுமப்பேன் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  உயிரே போனாலும் பரவாயில்லை;  நானே சென்று தருமபுர ஆதீன  பல்லக்கை  சுமப்பேன்.  எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம். 500 ஆண்டாக நடக்கும் பாரம்பரியத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது . தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.