“அடுத்த 100 ஆண்டுகளுக்கும் தவெக தான்...” - மதுரை ஆதினம்
Sep 17, 2026, 19:22 IST1789653148212
வருகிற இடைத்தேர்தல் மட்டுமின்றி, அடுத்த 100 ஆண்டுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக வெற்றி பெறும் என மதுரை ஆதினம் ஹரிஹர தேசிகர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிகர், “இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் அருமையாக இருக்கிறது. தம்பி ரமேஷ் நல்லா செய்கிறார். அற்புதமான ஆட்சி தவெக ஆட்சி. ஆலோசனை சொல்லவே வேண்டாம். நல்லா செய்கிறார்கள். ரமேஷ் நல்லா பழகுகிறார். நாங்கள் சொல்வதை கேட்டு செய்கிறேன் என சொல்கிறார். உங்களை கொண்டு சிறையில் வைப்பேன், கலவரம் செய்வேன் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. தவெக ஆட்சி அற்புதமான ஆட்சி. எனது ஆசி தவெகவிற்கே. முதல்வர் விஜய் போன்ற அற்புதமான முதலமைச்சரை நான் பார்த்ததில்லை. வருகிற இடைத்தேர்தல் மட்டுமின்றி, அடுத்த 100 ஆண்டுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக வெற்றி பெறும்” என்றார்.

