மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து முதல்வர் அறிக்கை!
Jul 18, 2026, 10:28 IST1784350721372
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
1956ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
அண்ணாதுரை 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

