"வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய அரசுக்கு அவகாசம் கொடுக்கலாம்" - ஹைகோர்ட் கருத்து!

 
ஸ்டாலின்

தென்மேற்குப் பருவமழையைக் காட்டிலும் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எப்போது புயல் உருவாகும், எப்போது எவ்வளவு மழை பெய்யும் என்பதை வானிலை ஆய்வு மையத்தாலேயே அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் மிக மோசமான நிலையே அதற்கு சாட்சி. டிசம்பர் மாதம் தான் சென்னைக்கு ஆகாது. ஆனால் இம்முறை நவம்பர் மாதமே பேரழிவை கொடுத்துவிட்டது.

சென்னையில் வெள்ள பாதிப்பு, மரங்களை அகற்றும் புகார்களுக்கு வாட்ஸ்ஆப் எண்கள்  அறிவிப்பு- Dinamani

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பையும் மீறி ஒரே நாளில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால்தான் சென்னையின் பெருவாரியான இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. முன்னெச்சரிக்கையாக மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஒரு இருளுக்குள் சிக்கியிருக்கின்றனர் சென்னை மக்கள். முதலமைச்சர் ஸ்டாலினே களத்திற்கு வந்து அரசு இயந்திரம் வேகமாக முடுக்கிவிட்டுள்ளார். இருப்பினும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை.

சென்னையில் மழை வெள்ளம் - முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி கள ஆய்வு | Dinamalar

இச்சூழலில் சென்னை மழை வெள்ள பாதிப்புகளை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் மழை, வெள்ள பாதிப்பைச் சரிசெய்யும் பணியில் தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் இணைந்து செயல்படுகின்றன. அவர்களுக்கு அவகாசம் அளித்து மீட்பு நடவடிக்கைகளுக்கு நாம் அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.