அவிநாசி மசூதி விரிவாக்கத்துக்கு இடைக்கால தடை - ஹைகோர்ட் உத்தரவு!

 
உயர் நீதிமன்றம்

திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்ற அமைப்பின் தலைவர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திரூப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுக்காவில் உள்ள மங்களம் சாலையில் காவல் குடியிருப்புக்காக நில வருவாய் அதிகாரி கடந்த 2001ம் ஆண்டு 85.1 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், இதில் 4.5 செண்ட் நிலம் சாலைக்காகவும், 18.6 செண்ட் நிலம் மசூதிக்காக ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பபட்டுள்ளது.

Madras High Court raps Election Commission of India, refuses to gag media  on oral observations | Cities News,The Indian Express

இந்த மசூதி அருகே 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இருப்பதாகவும், தற்போது இந்த மசூதியை விரிவாக்கம் செய்ய சட்ட விரோதமாக நில ஆக்கிரமிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் மசூதி விரிவாக்கத்திற்கு தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு மசூதி விரிவாக்க பணிக்கு இடைக்கால தடை விதித்தும், மனுதாரரின் மனு மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 3 வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.