“விஜய்க்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஓட்டு கன்ஃபார்ம்”... மத்திய சென்னை மாவட்ட தலைவர் குமார்
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருப்பதாக மத்திய சென்னை மாவட்ட தலைவர் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதை அடுத்து சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள நாதமுனி திரையரங்கில் 200-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கையில் கட்சி கொடியில் ஏந்தி கொண்டு, பட்டாசு வெடித்தும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தளபதி வாழ்க அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்று கோஷங்களை எழுப்பி தேர்தல் ஆணையம் அங்கீகரித்தை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் 5 ஜப்பான் நாட்டு விஜய் ரசிகர்களான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட தலைவர் மரியாதை செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை மாவட்ட தலைவர் குமார், “மாநாட்டிற்கு எத்தனை நிர்வாகிகள் கலந்து கொள்வது குறித்து விரைவில் மாவட்ட தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட உள்ளது, மாநாட்டிற்கு யார் வந்தாலும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தான், அரசியல் கட்சி தலைவர்கள் யார் வேண்டுமானாலும் மாநாட்டிற்கு அழைத்தால் வருவார்கள், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். மாநாட்டின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளோம். மாநாடு முடிந்தவுடன் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
தினந்தோறும் கட்சியில் இணை வேண்டுமென பெண்கள் அலுவலகத்திற்கு வருகிறார்கள். மகளிர் ஒவ்வொரு வீட்டிலும் விஜயின் மீது மிகவும் அன்பாக உள்ளார்கள். மகளிர் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஓட்டு உள்ளது” என்றார்.