மதுராந்தகத்தில் கள்ள ஓட்டு சர்ச்சை- “என் வாக்கு எங்கே?” என வாக்காளர்கள் கேள்வி
மதுராந்தகம் கடமலைப்புத்தூரில் பெண் வாக்காளரின் வாக்கை வேறு ஒருவர் செலுத்தி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுராந்தகம் தொகுதி கடமலைபுத்தூர் வாக்குச்சாவடியில் சுதா என்ற பெண்ணின் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவருக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. “என் வாக்கை போட்டது யார்? என் வாக்கு எங்கே?” என அதிகாரிகளிடம் கேள்வி கேட்டும் முறையான பதில் இல்லை என பெண் வாக்காளர் வேதனை தெரிவித்துள்ளார். முன்னதாக தாராபுரம் அடுத்த தளவாய்பட்டினத்தில் தனது வாக்கு எங்கே என கேள்வி எழுப்பி தேர்தல் அலுவலருடன் வாக்காளர் வாக்குவாதம் ஏற்கெனவே வாக்கு செலுத்தப்பட்டதாக அலுவலர்கள் கூறியதால் வாக்காளர் அழகிரிசாமி அதிர்ச்சியடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.
மாலை 5 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 83.86 சதவீதம் வாக்குகளும், தாராபுரத்தில் 78.53 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 78.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

