எளிமையாக நடைபெற்ற மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம்..! குவியும் வாழ்த்துக்கள்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே பிரபலமாக இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமாகி உள்ளார்.
திரை பிரபலங்கள் தொடங்கி, அரசியல்வாதிகளின் இல்லத் திருமணங்கள் வரை அனைத்து விழாக்களிலும் மாதம்பட்டி ரங்கராஜின் உணவு தான் பேமஸ். . இவரை புக்கிங் செய்ய பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும் என்றாலும் அதனை பொருட்படுத்தாமல் செலவு செய்து புக் செய்கின்றனர். நீண்ட நாட்களாக இந்தத் துறையில் கொடி கட்டி பறக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இருப்பினும் அந்த படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. மேலும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியது. சில நாட்களுக்கு முன் ஜாய் கிரிஸில்டா அவரது இன்ஸ்டாகிராமில் மாதம்பட்டி ரங்கராஜை மை மேன் என்று இதற்கு முன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா ஆகியோரின் திருமணம் பாரம்பரியம் முறையில் நடைபெற்றது.அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
#NewProfilePic Mr & Mrs Rangaraj ❤️ pic.twitter.com/qzF5iWoMAO
— Joy Crizildaa (@joy_stylist) July 26, 2025


