சில யூடிபர்களின் உண்மை முகத்தை ஆதாரத்துடன் விளக்கிய மதன்! சிக்கும் பிரபலங்கள்!!

 
மதன்

காசுக்காக ஹோட்டல்களில் அலைமோதும் யூடிபர்கள், அவர்கள் வாயால் உண்மைகளை பகிரும் வீடியோவை கண்டு பயன் அடையுங்கள் என சுமார் ஒரு மணி நேரம் கொண்ட வீடியோவை மார்ஸ் தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மதன் ரவிச்சந்திரன்.

1


சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சமூக வலைதளத்திலிருந்து காணாமல்போன யூடியூபர் ரவிச்சந்திரன், 15 வீடியோக்கள் முதல் 25 வீடியோக்கள் வரும் ஆனால் இது அனைத்துமே முன்னோட்டம்தான் எனக் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வீடியோ, ஆடியோ, 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான கண்டண்ட் இருக்கிறது என புட்டுபுட்டுவைக்கிறார்.

2

பாஜகவை மட்டும் குறிவைக்காமல் யூடியூபர்காரர்கள் தொடங்கி ஊடகவியலாளர் வரை அனைவரும் பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்டோரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பேசுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த வீடியோவில் யூடிபர்களான அய்யப்பன், மாதேஷ், ரவீந்திரன் துரைசாமி, கிஷோர் கே சாமி, ஆகியோர் பணம் வாங்குகின்றனர்.

3

மேலும் வெண்பா கீதாயனுடன் கலந்துரையாடுவது போன்று மதன் ரவிச்சந்திரன் பேசும் இந்த வீடியோவில், “இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் அண்ணாமலையிடமே இப்போது ஓடுவர். இது அண்ணாமலைக்கும் எங்களுக்கும் இடையே நடைபெறும் தனிப்பட்ட விவகாரம். இதில் யாரும் தலையிட வேண்டாம். அப்படி செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

4

அவதூறு பரப்புவதற்காகவே பணத்தை வாங்கிக்கொண்டு, ஒரு அதிகாரி மேலேயோ, ஒரு அரசியல்வாதி மேலேயோ போலி செய்திகளை போடுவதற்கே, இல்லாத ஒன்றை இருப்பதாக இரு கட்சிக்கு ஆதரவாக செய்தி போடுவது என இதையே வேலையாக வைத்துக்கொண்டு இந்த கூட்டம் அலைவதாக பகிரங்க குற்றச்சாட்டை வெண்பாவும் மதனும் முன்வைக்கின்றனர். இந்த லிஸ்ட்டில் பாஜக மட்டுமல்ல திமுகவும் இருக்கிறதா ஒரு போடு போட்டுள்ளார். 

இறுதியாக நான் எந்த கட்சியை சார்ந்தவனும் இல்லை எனக் கூறும் மதன், கட்சி மற்றும் அரசியல்வாதிகளை தரம்தாழ்த்தி பேசுவதற்காக மட்டும் காசு வாங்கவில்லை, ஒரு சில டிக்டாக் பிரபலங்கள், 2 கே கிட்ஸ்களை தரம் தாழ்த்தி பேசுவதற்காக கூட என்னிடம் காசு வாங்கி இருக்கிறார்கள் என புகார் கூறுகிறார். இனி எந்த யூடிபர்களும் இதுபோன்ற அவதூறுகளை பரப்புவதற்கு விலைபோக கூடாது என்பதே எனது நோக்கம் என நிறைவு செய்கிறார்.