மீண்டும் ஸ்டிங் வீடியோவை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தும் மதன் ரவிச்சந்திரன்

 
அண்ணாமலை

தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அடிப்படையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வார் ரூம் என்ற பெயரிலும், பாஜக பிரமுகர் ஐடிவிங் என்ற பெயரிலும் மார்ஃபிங் செய்து ஆபாசமாக அவதூறு கருத்துக்களை பரப்புவதாகவும், ஹனி ட்ராபிங் மற்றும் ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டுவருவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார்.

மதன் ரவிச்சந்திரன் - வெண்பா கீதாயன் வெளியிட்ட வீடியோ ஒன்றின் முகப்பு

இதுஒருபுறம் இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக நிர்வாகி கேடி ராகவன் பாஜக பெண் நிர்வாகியிடம் வீடியோ கால் மூலம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோவை யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் என்பவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி இந்த வீடியோவை அண்ணாமலையின் சம்மதத்துடன் வெளியிடுவதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இதற்காக அண்ணாமலை மதன் ரவிச்சந்திரனுக்கு அண்ணாமலை வீடு ஒன்றை பரிசாக அளித்தார் என்றும் அதன்பின் அண்ணாமலைக்கும் மதனுக்கும் மோதல் ஏற்பட்டது என்றும் சொல்லப்பட்டது. 

இந்நிலையில் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் அண்ணாமலையின் மறுப்பக்கம் தொடர்பான பரபரப்பு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். அதில் முதல் ஸ்டிங் வீடியோ மலர்கொடி கமிஷன் பற்றியது.  பாலியல் சர்ச்சையில் சிக்கிய ராகவன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷனே மலர்கொடி கமிஷன். பாஜகவில்  பெண்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என அமைக்கப்பட்ட கமிஷன், பாஜக தலைமையிடம் எவ்வளவு கமிஷன் வாங்குகிறது, ஓவர் நைட்டில் மலர்கொடி விளம்பரமானது எப்படி? மலர்கொடி கமிஷன் தொடர்பான வெளிவராத சீக்கிரட் போன்றவற்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில், மலர்கொடியே பாஜக தலைவர் அண்ணாமலை ஏமாற்றும் வேலைகளை புட்டுப்புட்டுவைக்கிறார்.  இதுபோன்று 15 வீடியோக்கள் இருப்பதாகவும் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.