விவாகரத்து வழக்கு- விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம்

 
புரட்சித்தலைவரான விஜய், புரட்சித்தலைவியான சங்கீதா! மதுரையில் வைரலாகும் போஸ்டர்…

விவாகரத்து கோரிய விஜய்யின் மனைவி சங்கீதா மீதான தவெக உறுப்பினர்களின் சமூக வலைதள தாக்குதல்களை கண்டிக்காத தவெக தலைவர் விஜய்ய்க்கு மாதர் சங்கம் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக  ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் சமூக வலைதள வன்முறையை விஜய் கண்டிக்காமல் இருப்பது குற்றத்திற்கு சமமானது. இதை வெளிப்படையாக தெளிவாக விஜய் கண்டிக்க வேண்டும், விஜய்யிடம் இருந்து விவகாரத்து கோரி சங்கீதா வழக்கு தொடர்ந்துள்ளது ஒரு சட்ட நடைமுறை. விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை சமூக வலைதளங்களில் இழிவுப்படுத்தி, ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. சங்கீதாவுக்கு எதிரான த.வெ.க.வினரின் பதிவுகள் கருத்துச் சுதந்திரம் அல்ல. பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை. சங்கீதா மீது அவதூறு பரப்புவர்கள் மீது கட்சி ரீதியாக விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். சைபர் கிரைமும் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளது.