சாராயம் அருந்திய 8 பேருக்கு மருத்துவமனையில் டயாலிசிஸ்- மா.சு.

 
masu

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவண்ணாமலை, ஸ்டான்லி, சேலம் மருத்துவமனைகளிலிருந்து சிறப்பு மருத்துவ குழு வருகை புரிந்து மருத்துவம் பார்த்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Image

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன், “எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் பாதிக்கபட்டு 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். பாதிப்பிற்குள்ளானவர்களை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு திருவண்ணாமலை, சென்னை ஸ்டான்லி, சேலம் மருத்துவமனைகளிலிருந்து சிறப்பு மருத்துவ குழு வருகை புரிந்து மருத்துவம் செய்து கொண்டிருக்கிறது.

Image

சாராயம் அருந்திய 8 பேருக்கு மருத்துவமனையில் டயாலிசிலிஸ் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவர் லதா, லட்சுமணர் ஆகிய இருவரின் தலைமையில் 11 பேர் கொண்ட மருத்துவ குழு சிறப்பு சிகிச்சை 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ள வளாகமாக முண்டியம்பாக்கம்  மருத்துவமனை உள்ளது. மருத்துவர்களும், மருந்துகளும் போதிய அளவிற்கு இருக்கிறது” எனக் கூறினார்.