தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அரசு இறக்கப்போகும் சொகுசு பேருந்துகள் ..! என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா.?
பயணிகளுக்கு அதிக வசதி மற்றும் தரமான அனுபவத்தை வழங்கும் வகையில், புதிய வால்வோ மல்டி-ஆக்சில் சொகுசு பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளன. தமிழக அரசு தரப்பில் இருந்து ஏற்கனவே 20 வால்வோ சொகுசு பேருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரில் அவற்றின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேவையான தரத்தைக் கண்டறிந்து, சிறிய தொழில்நுட்ப திருத்தங்கள் செய்யப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் அனைத்தும் மாநில போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்த வால்வோ பேருந்துகள் புதிய வசதிகளுடன், சர்வதேச தரத்திலான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, மேம்பட்ட பிரேக்கிங் சிஸ்டம், டிஜிட்டல் டிஸ்ப்ளே, பவர் சார்ஜிங் வசதி, மற்றும் சீரான இருக்கை அமைப்புகள் என பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சொகுசு பேருந்துகள் டிசம்பர் மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற நீண்ட தூரப் பாதைகளில் இவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையான தரம் அரசுப் போக்குவரத்திலும் கிடைக்கும்.


