பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இன்று மதிய உணவு

 
bus

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் பொது போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. நகர், புறநகர், மலைப்பகுதி மற்றும் விரைவு பேருந்து சேவைகளை மிகவும் சிக்கனமான மற்றும் திறமையான முறையில் நமது மாநிலத்தில் போக்குவரத்து சேவை அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

bus

அண்டை மாநிலங்களான ஆந்திரபிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் சிற்றூர் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளும் போக்குவரத்து சேவை மூலம் இணைக்கப்படுகின்றன.

BUS

இந்நிலையில் சென்னையில் மாநகர சிறப்பு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இன்று மதிய உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர சிறப்புப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மதிய உணவிற்காக தலா ரூ.50 வீதம் தர ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.