நாளை சந்திர கிரகணம்.. கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை..? செய்ய கூடாதவை..?

 
1 1

சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது?

பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் பகவானி நினைத்து வழிபட வேண்டும்

2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

3. கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.

4. குறிப்பாக கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.

5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:

1. உணவு மற்றும் தண்ணீரில், தர்ப்பை அல்லது துளசி இலைகளை போட வேண்டும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.

2. கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடுவதால், கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.

3. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுதால் நன்மை உண்டாகும்.

4. சந்திர கிரகணம் முடிந்தவுடன் வெள்ளைப் பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.

5.இந்த சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.