இன்று சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு அதிகம்? இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல்?

 
1

சந்திர கிரகணம் இந்திய நேரப்படி, காலை 6.53 மணிக்குத் தொடங்கி, மதியம் 12.31 மணிக்கு முடிவடைகிறது. இந்த கிரகணம் பகல் வேளையில் நிகழ்வதால், இந்தியாவில் இருந்து இதனைப் பார்க்க முடியாது.

இந்த கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் ஏதேனும் ஒரு வகையில் காணப்படலாம் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிட கணிப்புகள் குறிப்பிடுகின்றன. 

அந்த வகையில், கும்ப ராசியில் நிகழவுள்ள 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடக ராசியினருக்கு பணியிடத்தில் வேலைப்பளு கணிசமாக அதிகரிக்கும். இதன்காரணமாக மன அழுத்தமும் உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால், போதிய ஓய்வெடுத்து ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மேலும், நிதி விவகாரங்களில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. குறிப்பாக, இந்த காலகட்டத்தில் புதிய சொத்துக்கள் வாங்குவதையோ அல்லது பெரிய தொகையை முதலீடு செய்வதையோ தவிர்ப்பது நல்லது; தவறினால் கடுமையான நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும்.

கன்னி ராசியினரைப் பொறுத்தவரை, பேச்சில் அதிக நிதானம் தேவைப்படும் நேரமிது. குடும்பத்திலோ அல்லது பணிபுரியும் இடத்திலோ பேசும்போது தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகளுக்கும் மோதல்களுக்கும் வழியமைத்துவிடும். உங்கள் கடின உழைப்பிற்கு ஓரளவு பலன் கிடைத்தாலும், எதிர்பாராத செலவுகள் எழக்கூடும் என்பதால் சிக்கனம் தேவை. புதிய தொழில் தொடங்கத் திட்டமிட்டிருந்தால், அவசரப்படாமல் சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்து கவனமாக முடிவெடுக்க வேண்டும்.

கிரகணம் தங்கள் சொந்த ராசியிலேயே நிகழ்வதால் கும்ப ராசியினர் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு அலட்சியம்கூட மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடும். வியாபாரிகள் லாபம் பெற வழக்கத்தை விடக் கூடுதல் உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதோடு, புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் தயக்கமும் கவனமும் தேவை. அதேபோல பணியிடத்திலும் குடும்ப உறவுகளிடமும் நிதானத்தைக் கையாள்வது அவசியம்; சிறிய வாக்குவாதங்கள் கூட பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளதால் அமைதி காப்பதே நன்மையளிக்கும்.