"காத்திருந்த பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்!" - இண்டிகோ வழங்கும் ரூ.10,000 போனஸ் வவுச்சர்..!

 
1 1

நாடு முழுவதும் இந்த மாதம் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. கடந்த டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இதனையடுத்து , டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்தது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்த வவுச்சர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இது அரசு விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய ரூ. 5000-10,000 இழப்பீடு தொகையுடன் சேர்த்து கூடுதலாக இண்டிகோ நிறுவனம் சார்பில் வழங்கப்படும் தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.