ரூ.3,100-ஐ தாண்டிய LPG விலை! உங்கள் ஊரில் இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

 
Q

19 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் செப்டம்பர் மாதம் ₹2,916.50 ஆக இருந்த 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை, தற்போது ₹66.50 உயர்ந்து ₹2,983 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், நாட்டின் தலைநகரான டெல்லியில் ₹62.50 உயர்ந்து ₹2,810 ஆகவும், மும்பையில் ₹63 உயர்ந்து ₹2,764 ஆகவும் விற்கப்படுகிறது.முக்கிய நகரங்களிலேயே பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக ₹71.50 உயர்ந்து ஒரு சிலிண்டர் ₹3,100.50 என்ற உச்சத்தை தொட்டுள்ளது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்ட போதிலும், வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

டெல்லியில் ₹942, மும்பையில் ₹941.50, சென்னையில் ₹957.50 மற்றும் பாட்னாவில் ₹1,031.50 என்ற பழைய விலையிலேயே வீட்டு உபயோக சிலிண்டர்கள் தொடர்ந்து கிடைக்கும்.