எல்.பி.ஜி., நுகர்வோர் கவனத்திற்கு! - மாவட்ட வாரியாக இயற்கை எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்..!

 
1

தமிழக அரசின் தொழில் துறை செயலர் அருண் ராய் அறிக்கை:

எல்.பி.ஜி., எனப்படும் திரவநிலை பெட்ரோலிய எரிவாயு வினியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலால், வணிக மற்றும் தொழில் துறை எல்.பி.ஜி., ஒதுக்கீட்டை முதலில் 20 சதவீத அளவிற்கு மத்திய அரசு குறைத்தது.தற்போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த ஒதுக்கீட்டில், எல்.பி.ஜி., ஒதுக்கீடு பெற, அனைத்து வணிக மற்றும் தொழில் துறை, எல்.பி.ஜி., நுகர்வோர், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தங்கள் மாவட்டங்களில் உள்ள நகர எரிவாயு வினியோக நிறுவனங்களிடம், பி.என்.ஜி., எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Dinamalar Tamil News

பி.என்.ஜி., இணைப்புகளை பெற ஆர்வமுள்ள வணிக மற்றும் தொழில் துறை, எல்.பி.ஜி., நுகர்வோர், நகர எரிவாயு வினியோக நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு, நகர எரிவாயு வினியோக நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் பிரசாத்தை, 63574 69742 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.