குட் நியூஸ் சொன்ன ரயில்வே அமைச்சர் : இனி 45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு லோயர் பெர்த்..!
இந்தியாவை பொறுத்தவரை நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக வயதானவர்கள்.ஆனால் சில நேரங்களில் வயதான பெண்களும், முதியவர்களும் மேல் படுக்கையில் (அப்பர் பெர்த்) பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இது பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
ஆனால் சில நேரங்களில் வயதான பெண்களும், முதியவர்களும் மேல் படுக்கையில் (அப்பர் பெர்த்) பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இது பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
அதில் மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தானாகவே லோயர் பெர்த் இருக்கை ஒதுக்கப்படும் எனவும், முன்பதிவின் போது, தங்கள் விருப்பமாக எதையும் தேர்வு செய்யாவிட்டாலும், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு கீழ்படுக்கை வசதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்காக படுக்கை வகுப்பில் ஒரு பெட்டிக்கு ஆறு முதல் ஏழு பெர்த்களும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் நான்கு முதல் ஐந்து பெர்த்களும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் மூன்று முதல் நான்கு பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ராஜ்தானி, சதாப்தி மற்றும் அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் உடன் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் சிறப்பு முன்பதிவு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளது.ஸ்லீப்பர் மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் தலா நான்கு பெர்த்களும், அவர்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியினர் உள்ளிட்டோருக்கு கீழ் படுக்கை காலியாக இருந்தால் அவர்களுக்கு அதனை ஒதுக்கி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


