தமிழகத்தை நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! மழை வெளுக்க போகுது!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டு இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
.