வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

 
d

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்  காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 12-04-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.