சென்னையில் நடுரோட்டில் காதல் ஜோடி செய்த அட்ராசிட்டி

 
Love

சென்னை மதுரவாயல் புறவழிச் சாலையில் காதல் ஜோடி ஒன்று செய்த அட்ராசிட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


காதலன் ஒருவன் தன் காதலிக்கு தன் காதலை சொல்லிய நிகழ்வு இணையத்தில் பரவி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் தாம்பரம் புறவழிச்சாலையில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. தன் காதலியை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் காதலன் தன் காதலை வெளிப்படுத்த தனது நண்பர்கள் மூலம் இருசக்கர வாகனத்தில் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த அவரது நண்பர்கள் I love U சிம்ப்ல் கொண்ட டி ஷர்டை அணிந்து வந்தனர். பின்னர் பின்னால் வந்த ஒருவர் பூச்செண்டை தனது நண்பரிடம் கொடுக்க அதனை தன் காதலியிடம் கொடுத்தார் அந்த இளைஞர். இந்த நிகழ்வில் வந்த யாரும் ஹெல்மெட் அணியவில்லை.

இதனை குறிப்பிட்டு நெட்டிசன்கள் "வெளிநாட்டு காரனை பார்த்து இந்த கிரகம்லாம் ஓகே. ஆன, ஒருதன் கூட ஹெல்மெட் போடவில்லை.ஹைவேஸ்ல போற மத்தவங்க  உயிருக்கும் ரிஸ்க்” என பதிவிட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.