தங்கைக்கு காதல் தொல்லை- தட்டிகேட்ட அண்ணனின் கழுத்து அறுப்பு

 
கத்திக்குத்து

கிருஷ்ணகிரி ஆடவர் கலை கல்லூரியில் தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த மாணவனை தட்டிகேட்ட மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி அருகே சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன திருப்பதி. கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிணி அறிவியல் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படித்து வரும் இவரது தங்கைக்கு, செட்டியம்பட்டியை சார்ந்த மூன்றாம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலம் படிக்கும் மாணவன் லிங்கேஸ்வரன் என்பவர் காதலிக்குமாறு தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து  இன்று மாணவியின் சகோதரர் சின்ன திருப்பதி என்பவர்  லிங்கேஸ்வரனிடம்  காதல் விவகாரம் குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லிங்கேஸ்வரன், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் சின்ன திருப்பதி கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சின்ன திருப்பதி கீழே விழுந்த நிலையில். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 
 
கழுத்தை அறுத்த லிங்கேஸ்வரன் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.