"மனுஷங்க கிட்ட கூட பார்க்க முடியாத அன்பு!" – கடைக்காரரை கட்டியணைத்த குரங்கு...!!!

 
1

ஒடிசாவில் கடைக்காரர் ஒருவர் தனது கடையில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த குரங்கு ஒன்று அவரைப் பயமுறுத்தாமல் பாசமாக கட்டியணைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விலங்குகளின் இந்த எதிர்பாராத பாசப் போராட்டம் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

நடந்தது என்ன: 

கடைக்காரர் ஒருவர் வழக்கம்போல் தனது கடையில் இருக்கையில் அமர்ந்து அமைதியாகத் தனது செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஒரு குரங்கு கடைக்குள் நுழைந்தது.

குரங்கைக் கண்டதும் அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு நபர் பயந்துபோய் அங்கிருந்து மெல்ல நழுவிச் சென்றார். குரங்கு தன்னை கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் கடை உரிமையாளரும் ஆரம்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நடுங்கிக் கொண்டே அங்கேயே அமர்ந்திருந்தார்.

ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் அந்த குரங்கு எந்த விதமான ஆபத்தையும் விளைவிக்காமல், மிகவும் பாசமாக கடை உரிமையாளரைக் கட்டியணைத்துக் கொண்டது. மனிதர்கள் மீது குரங்குகள் காட்டும் தூய்மையான அன்பை வெளிப்படுத்தும் இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.