காலையில் திருமணம்.. மாலையில் கத்திக்குத்து .. காதலர்கள் விபரீதம்

 
lovers

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் காலையில் திருமணம் செய்த காதலர்கள் மாலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka Bride Bride groom


சம்பரசனஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் 24 வயதான நவீன் என்பவரும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பைனாபள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான லகிதா ஸ்ரீ என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இருவரது வீட்டிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே,  குடும்பத்தினரின் ஒப்புதலுடன் நேற்றைய தினம் சம்பரசனஹள்ளி கிராமத்தில் வெகுவிமரிசையாக திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து காதல் தம்பதி இருவரும் நேற்று மாலை 5 மணியளவில் தனியறையில் இருந்துள்ளனர். தம்பதி தனிமையில் பேசிக்கொண்டிருப்பதால், குடும்பத்தினரும் அடுத்தடுத்த சடங்குகளை செய்வதில் மும்முரமாகி கொண்டிருந்தனர். அதற்குள் துமண தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, திடீரென ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கதவை திறந்து பார்த்தபோது புதுமண தம்பதி இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். மணப்பெண் தலை, கழுத்து, கை, கால், முதுகு ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டுடனும், மணமகன் தலை, கை, தோள்பட்டை பகுதியில் கத்தி வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

Karnataka Bride Bride groom

பிறகு இருவரையும் ராபர்ட்சன் பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மணமகள் லகிதாஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்றும், நவீன் கவலைக்கிடமாக இருப்பதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோலார் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் அறிவுறுத்தினர். இச்சம்பவம் குறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.