டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி!

 
seeman

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தன.

Image

ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, 10 ஆயிரத்து 804 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு தபால் வாக்குகளில் 10 வாக்குகள் கிடைத்தன.

கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 7.65 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 6.3 சதவீதமாக உள்ளது. நாம் தமிழர் கட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வாங்கிய ஓட்டு- 11, 629, தற்போதைய தேர்தலில் வாங்கிய ஓட்டு- 10,804 ஆகும்.  நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கை பெறாததால் டெபாசிட் இழந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்து முடிந்தநிலையில்,  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம்  1 லட்சத்து  74 வாக்குகளும்,  398 தபால் வாக்குகளும் பதிவான நிலையில், சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில்,  தற்போது வரை வாக்கு எண்ணிக்கை 7 சுற்றுகள்  நிறைவடைந்திருக்கிறது. 15 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில், 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.