உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது உயிரிழப்பு - நிவாரணத் தொகை உயர்வு
Updated: Jun 25, 2024, 09:01 IST1719286305149

உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது எதிர்பாராத வகையில் உயிரிழக்கும் மற்றும் காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்தது தமிழ்நாடு அரசு.
- குண்டுவெடிப்பு தாக்குதல், சமூக விரோத தாக்குதல் போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ₹10 லட்சத்தில் இருந்து ₹30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பிற காரணங்களால் உயிரிழப்பவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ₹5 லட்சத்தில் இருந்து ₹15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ₹2.5 லட்சத்தில் இருந்து ₹7.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
- சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை ₹10,000ல் இருந்து ₹40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.