இறந்த பாம்பை சாலையில் வீசியதால் கோர விபத்து - சிறுவர்களின் சேட்டையால் நடந்த விபரீதம்

 
accident

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறுவர்கள்  பாம்பை தூக்கி வீசியதால், அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வாகனத்தை திடீரென பிரேக் அடித்து நிறுத்தியுள்ளார். இதனால் லாரியிலிருந்து தவறி விழுந்த பல டன் எடைகொண்ட இரும்பு உருளை மீது  பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

aacident

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கனரக வாகன ஓட்டுநர் சுப்பிரமணி. இவர் சென்னையிலிருந்து கோவைக்கு கண்டெய்னர் லாரி மூலம் பல டன் கணக்கில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவைக்கு சென்று கொண்டிருந்தார்,  இவரது வாகனம் விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் என்ற இடத்தில் சென்ற போது தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நான்கு சிறுவர்கள், இறந்த பாம்பை தேசிய நெடுஞ்சாலையில் தூக்கி வீசி உள்ளனர். பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்த கண்டெய்னர் லாரியை பிரேக் பிடித்து நிறுத்தினார், இதனால் கண்டெய்னர் லாரியில் இருந்த மிகப்பெரிய அளவிலான பல டன் எடை கொண்ட இரும்பு உருளை ஒன்று சாலையில் விழுந்தது.

அந்த சமயத்தில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு சொகுசு பேருந்து சாலையில் விழுந்த ராட்சச இரும்பின் மீது மோதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புக் கட்டையை உடைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து எதிரேவந்த ஆட்டோ ஓட்டுனர் உட்பட பேருந்தில் பயணம் செய்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் பேருந்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர், காயமடைந்தவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் விழுப்புரம் சென்னை தேசிய ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.