சபரிமலையில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன்

 
ச் ச்

கேரளா மாநிலம் சபரிமலையில் மகர ஜோதியை தொடர்ந்து திண்டுக்கல் மலை அடிவாரம் ஐயப்பன் கோவிலில் தீபஜோதி ஏற்றப்பட்டது.

கேரள மாநிலம் சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகரஜோதி இன்று 14.01.26 மாலை ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகரஜோதியை முன்னிட்டு கோவிலில் 10 ஆயிரம் அகல் விளக்குகளை கொண்டு சிவன் மற்றும் ஸ்வஸ்திக் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டது இதனைத் தொடர்ந்து கோவிலின் கோபுரத்திற்கு அருகே  10அடி உயரத்தில் புதிதாக விளக்குத்தூண் அமைக்கப்பட்டு அதில் எண்ணை திரி ஊற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

சபரிமலையில் மகரஜோதி காண்பிக்கப்பட்ட பின் இங்கு கோவிலில் யாகசாலையில் இருந்து யாக கலசம் மற்றும் தீ பந்தத்துடன் பக்தர்கள் படை சூழ மேளதாளங்கள் முழங்க கோவில் சுற்றி  வலம் வந்தனர். பின்னர் கோவில் கோபுரம் அருகே அமைக்கப்பட்டிருந்த விளக்குத் தூண் மீது தீப ஜோதி ஏற்றப்பட்டது. தீப ஜோதி ஏற்றிய உடன் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என  கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஐயப்பனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது இதனை தொடர்ந்து பக்தர்கள் ஐயப்பனின் அருள் பெற்றுச் சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.