கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்!

 
‘மருமகனுடன் உல்லாச வீடியோ லீக்’ : யார் பண்ண வேலைன்னு  கண்டுபிடியுங்க  ஆபிஸர்!

கடலூர் மாவட்டத்தின் வர்த்தக நகரமான பண்ருட்டி வ.உ.சி நகரை சேர்ந்த சுந்தர் என்பவர் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சாலையில் விதைகள் மற்றும் பூச்சி மருந்து (அக்ரோ சென்டர்) விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். 

 நடிகைகளுடன் உல்லாசம் அனுபவிக்க கொள்ளையடித்த கேரள ஆசாமி கைது

இந்த கடையில் கடந்த 10-ந் தேதி நள்ளிரவில் அவரது கடையின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த ரூபாய் 4.70 லட்சம் பணத்தை திருடி சென்றனர். இந்த திருட்டு வணிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கடையில் உரிமையாளர் சுந்தர் பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைரேகை மற்றும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் சிக்கிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடலூர் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு போலீசார் தமிழ்நாடு முழுவதும் தங்களது தேடுதல் பணியை தீவிர படுத்தினர்.

அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்த்ச் சிசிடிவியில் பதிவான நபர் மீது வழக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை துப்பாக வைத்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தி வந்த நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் பிடிபட்ட அவரிடம் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் மட்டுமே இருந்ததை தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்து திருட்டு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் மீது மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இவருக்கு மதுரையில் ஒரு மனைவியும் திருவனந்தபுரத்தில் ஒரு மனைவியும் இருப்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் சம்பவத்தன்று சென்னை சென்று திரும்பிய போது தொழுகைக்காக பண்ருட்டியில் பேருந்தில் இருந்து இறங்கியதாகவும் அதிகாலையில் தொழுகை முடித்துவிட்டு அங்குள்ள உரம் மற்றும் பூச்சி மருந்து கடையை பார்த்தவுடன் அவருக்கு திருட வேண்டிய எண்ணம் தோன்றியதால் உள்ளே புகுந்து பார்த்த போது 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இருந்ததை கண்டுபிடித்து அதனை திருடிவிட்டு சென்றதாக தெரிகிறது.

திருடி சென்றதில் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் மீதி பணம் எங்கே என போலீசார் கேட்டபோது கூலாக பதில் அளித்துள்ளார் ஹமீது. திருடிய பணத்தை கொண்டு கேரளாவில் சொகுசு விடுதியில் அரை எடுத்து தங்கி அங்கு துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.